ஆளுமை:கதிரவேற்பிள்ளை, நாகப்பபிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கதிரவேற்பிள்ளை
தந்தை நாகப்பபிள்ளை
தாய் சிவகாமி
பிறப்பு 1844
இறப்பு 1907
ஊர் புலோலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கதிரவேற்பிள்ளை, நாகப்பபிள்ளை (1844 - 1907) யாழ்ப்பாணம், புலோலியைச் சேர்ந்த சமயவாதி, எழுத்தாளர். இவரது தந்தை நாகப்பபிள்ளை; தாய் சிவகாமி. ஆரம்பக்கல்வியைப் புலோலியில் உள்ள பாடசாலையில் கற்றுச் சிதம்பரப்பிள்ளை என்பவரிடத்தில் எழுதுவினைஞராகப் பணியாற்றினார். தனது இருபத்தோராவது வயதில் சென்னை சென்று கனகசுந்தரம் பிள்ளையிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றதோடு வடமொழியையும் கற்றுக்கொண்டார்.

சென்னையில் வாழும் காலத்தில் சைவசமய விரிவுரைகளை நடாத்தி வந்தார். மாயாவாதத்தினை மறுத்துப்பேசுவதில் வல்லமை பெற்றிருந்தமையால் 'மாயாவாத தும்சகோளரி' என்னும் பட்டத்தைப் பெற்றார். இவர் கவிகள் பல பாடியதுடன் நூல்களையும் எழுதியுள்ளார். யாழ்ப்பாணத் தமிழகராதி என்னும் அகரமுதலியினைத் தொகுத்ததோடு சிவசேத்திராலய மகோற்சவ உண்மை விளக்கம், சுப்பிரமணிய பராக்கிரமம், கூர்ம புராண விரிவுரை, பழனித்தல புராணவுரை, சைவ சந்திரிகை, சைவசித்தாந்தச் சுருக்கம், புத்தமத கண்டணம், மருட்பா மறுப்பு ஆகிய நூல்களை எழுதியுள்ளார். வி.கலியாணசுந்தர முதலியார் அவர்கள் இவரது வரலாற்றை நூலாக்கி 1908 ஆம் ஆண்டு சென்னையில் வெளியிட்டுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 242
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 87-90
  • நூலக எண்: 963 பக்கங்கள் 62-64
  • நூலக எண்: 15417 பக்கங்கள் 44-48
  • நூலக எண்: 11851 பக்கங்கள் 17-19
  • நூலக எண்: 16946 பக்கங்கள் 88