ஆளுமை:இராசரத்தினம், கணபதி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராசரத்தினம்
தந்தை கணபதி
பிறப்பு 1927.01.06
இறப்பு 2004
ஊர் காரைநகர்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசரத்தினம், கணபதி (1927.01.06 - 2004) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த ஓவியர், நாடக ஆர்வலர், ஆசிரியர். இவரது தந்தை கணபதி. சென்னை ஓவியக் கல்லூரியில் ஓவியப் பயிற்சி பெற்ற இவர், யாழ்ப்பாணத்தின் முன்னோடி ஓவிய அமைப்பான வின்சர் கலைக் கழகத்தில் விரிவுரையாளராக இணைந்து செயற்பட்டார். இவர் மெய்யுரு (Portrait) பற்றி நூல் எழுதியுள்ளார். திருகோணமலையில் சித்திரப் பாட வித்தியாதிகாரியாகக் கடமையாற்றினார்.

இவரது பிரதிமை ஓவியங்கள் உயிரோட்டமுடைய ஆக்கங்களாகும். பிரதிமை ஓவியம், ஓவியத்தொடுப்பமைவு, நீர்வண்ணப் பிரயோகம் போன்றனவற்றில் இவர் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர். இருபரிமாணச் சட்டத்தில் முப்பரிமாணத்தைக் கொண்டுவரும் இவரது ஓவியங்கள் அனைத்திலும் பச்சைவர்ணப் பிரயோகம் முதன்மை பெறுகிறது. பிரதிமைக்கலை, யோகர்சுவாமிகளும் கிளிநொச்சியும் ஆகியவை இவரது நூல்கள். இவரால் வரையப்பட்ட ப்[இரதிமை ஓவியங்களில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக உப வேந்தர்களான க. கைலாசபதி, பேரா. துரைராசா ஆகியோரது பிரதிமை ஓவியங்கள் குறிப்பிடத்தக்கது.

தமிழ் இலக்கிய விழாவில் ஆளுநர் விருது பெற்றார்.

இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 27
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 234