ஆளுமை:திருக்குமரன், தி
பெயர் | திருக்குமரன் |
பிறப்பு | 1978.06.09 |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | எழுத்தாளர், கவிஞர், ஊடகவியலாளர், சூழலியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
திருக்குமரன், தி (1978.06.09 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், ஊடகவியலாளர், சூழலியலாளர். 1999 இல் இருந்து எழுதத் தொடங்கியவர். இவர் யாழ். இந்துக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், யாழ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும் மேற் கொண்டார். இவர் சக்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், தினக்குரலில் ஊடகராகவும் கடமையாற்றியவர். பின்னர் அரச சேவையில் இணைந்து சுற்றாடல் வன வளங்கள் அமைச்சில் அதிகாரியாகவும், பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சில் அமைச்சரின் பாராளுமன்ற ஆராய்ச்சிச் செயலாளராகவும் கடமையாற்றியவர். தற்போது ஐரோப்பிய நாடொன்றில் சுதந்திர ஊடகவியலாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
ஊர்க்குருவி என்னும் புனைபெயர் கொண்டவர். இவரது அரசியல், எழுத்துச் செயற்பாடுகள் காரணமாக 2008 இல் இலங்கை இராணுவத்தால் கடத்தப்பட்டு இரகசிய வதை முகாமொன்றில் மிகுந்த சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். அதன் பின் 2009 இல் இந்திய உளவுத்துறையால் தமிழ் நாட்டில் கைது செய்யப்பட்ட இவர், வதைக்குள்ளாக்கப்பட்டு செங்கல்ப்பட்டு சிறப்புச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். 2010 இல் ஐரோப்பிய நாடொன்றில் குடிவரவுக் காரணங்களுக்காக மீண்டும் கைது செய்யப்பட்ட்டு சிறையில் அடைக்கப்பட்ட இவர், தற்சமயம் ஐரோப்பிய நாடொன்றில் வாழ்கின்றார்.
திருக்குமரன் கவிதைகள் (கவிதைத் தொகுப்பு-2004), சேதுக் கால்வாய்த்திட்டம் (இராணுவ, அரசியல், பொருளாதார, சூழலியல் நோக்கு- 2006), விழுங்கப்பட்ட விதைகள் (கவிதைத் தொகுப்பு, உயிரெழுத்து வெளியீடு- 2012), தனித்திருத்தல் (கவிதைத் தொகுப்பு, உயிரெழுத்து வெளியீடு 2014) ஆகிய நூல்களை வெளியிட்டார்.