ஆளுமை:முத்துத்தம்பி, சின்னையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முத்துத்தம்பி
தந்தை சின்னையா
தாய் அன்னப்பிள்ளை
பிறப்பு 1912.04.04
ஊர் வேலணை
வகை தொழிலதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முத்துத்தம்பி, சின்னையா (1912.04.04 -) வேலணையைச் சேர்ந்த ஒரு வர்த்தகர். இவரது தந்தை சின்னையா; இவரது தாய் அன்னப்பிள்ளை. இவர் ஆரம்ப, இடைநிலைக் கல்வியை வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் பயின்று குடும்ப நிலை காரணமாகத் தனது பதினெட்டாவது வயதில் கொழும்பு சென்று கொம்பனித் தெருவில் ஒரு நிறுவனத்தில் சாதாரண ஊழியராகத் தொழிலை ஆரம்பித்தார்.

இவர் 1945 ஆம் ஆண்டளவில் கொழும்புக் கோட்டைப் பகுதியில் காகில்ஸ், மில்லர்ஸ் நிறுவனங்களுக்கு அண்மித்ததாகத் தனக்குச் சொந்தமாக ஒரு நிறுவனத்தை ஸ்தாபித்து வியாபாரம் செய்து பொருள்வளங்களை ஈட்டிக்கொண்டார்.

இவர் வியாபாரத்தில் ஈட்டிய செல்வங்களில் ஒரு பகுதியை வேலணையின் கல்வி முன்னேற்றத்துக்கும் சமய, சமூக முன்னேற்றத்துக்குமாகப் பயன்படுத்திச் சிறந்த சமூக சேவையாளனாகவும் தன்னை ஆக்கிக்கொண்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 438-440