ஆளுமை:திருநாவுக்கரசு, சிவக்கொழுந்து

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திருநாவுக்கரசு
தந்தை சிவக்கொழுந்து
பிறப்பு 1926.04.28
ஊர் நல்லூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருநாவுக்கரசு, சிவக்கொழுந்து (1926.04.28 - ) யாழ்ப்பாணம், நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட நாடகக் கலைஞர். இவரது தந்தை சிவக்கொழுந்து. இவர் புகைப்படக் கலையைத் தனது தொழிலாகக் கொண்டிருந்ததுடன் நாடகம், சிற்பம், வில்லிசை ஆகிய கலைகளிலும் தனது திறனை வெளிப்படுத்தியுள்ளார். சிற்பக்கலையைக் கற்றுக் கொள்வதற்காக இந்தியா சென்ற இவர், இந்திய இராணுவத்தில் இணைந்து சிலகாலம் பணியாற்றியுள்ளார்.

பாரம்பரிய நாடகங்கள், சமூக நாடகங்கள், வரலாற்று நாடகங்கள், நடன நாடகங்கள், நவீன நாடகங்கள் போன்ற நாடக வகைகள் மற்றும் மோடிகள் யாவற்றிலும் கற்றறிவும் பாட்டறிவும் கொண்ட இவர், ஒப்பனைக் கலைஞராகவும் விளங்கினார். இவர் இலங்கைத் தமிழ்ச் சினிமாக்களான டாக்ஸி டிரைவர், குத்துவிளக்கு ஆகியவற்றில் நடித்துள்ளதோடு கடமையின் எல்லை என்ற படத்தில் உதவி நெறியாளராகவும் செயற்பட்டுள்ளார்.

இவரது கலையாற்றலுக்காக நாடகச் செல்வன் என்ற பட்டத்தினை வவுனியா கலை இலக்கிய வட்டமும் கலைஞானச்சுடர் என்ற பட்டத்தினை நல்லூர்ப் பிரதேச செயலகக் கலாச்சாரப் பேரவை 2008 ஆம் ஆண்டு வழங்கிக் கௌரவித்துள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 153
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 181