ஆளுமை:தமிழ்ப்பிரியா, இளங்கோவன்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:17, 6 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | தமிழ்ப்பிரியா, இளங்கோவன் |
பிறப்பு | |
ஊர் | |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தமிழ்ப்பிரியா, இளங்கோவன் ஓர் எழுத்தாளர். இவர் இலங்கை- இந்தியப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் சிறுகதைகள், குறுநாவல்கள் எழுதி வருவதுடன் பாரிஸில் வாழ்ந்து வருகின்றார். இவர் T.T.N. தொலைக்காட்சியில் சித்திரம் பேசுதடி நிகழ்ச்சியில் கவிதை பாடியதுடன் இவரது படைப்புக்கள் வீரகேசரி, ஈழநாடு, தினகரன், ஈழமுரசு போன்ற பத்திரிகைகளிலும் மல்லிகை, சிரித்திரன் போன்ற சிற்றிதழ்களிலும் வெளிவருகின்றன. தினகரன் வாரமலரில் 'உண்மை அன்பிற்கு ஊறு ஏற்படாது', 'இறைவன் கொடுத்த வரம்' ஆகிய இரண்டு குறுநாவல்களை எழுதியதுடன், இவரின் மெல்லிசைப் பாடல்கள், இசையும் கதையும், கவிதைகளென நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியிருக்கின்றன.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 457-458