ஆளுமை:கனகரெத்தினம், அருளம்பலம்
பெயர் | கனகரெத்தினம் |
தந்தை | அருளம்பலம் |
தாய் | தங்கமுத்து |
பிறப்பு | 1916 |
இறப்பு | 2000.03 |
ஊர் | புங்குடுதீவு |
வகை | கல்வியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கனகரெத்தினம், அருளம்பலம் (1916- 2000.03) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர், கல்வியியலாளர். இவரது தந்தை அருளம்பலம்; இவரது தாய் தங்கமுத்து. ஆரம்பக் கல்வியை ஶ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயத்தில் பயின்று 1932 இல் கல்விப் பொதுத் தராதர (சா.த) பரீட்சையில் சித்தியடைந்தார்.
1939 ஆம் ஆண்டு பதுளையில் ஆசிரியராகப் பணிபுரிந்த இவர், அங்கு நடந்த பரீட்சையில் உயர் சித்தியடைந்து ஆசிரிய நற்சாட்சிப்பத்திரம் பெற்று, 1942 -1949 வரை நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகப் பதவி வகித்தார். அத்தோடு சித்தி விநாயகர் துரைசாமி வித்தியாலயத்தில் சில காலங்களும் சுப்பிரமணிய வித்தியாலயத்தில் 13 வருடங்களும் கடமை புரிந்தார். பின்னர் பலாலி ஆசிரிய கலாசாலையில் தேர்ச்சி பெற்றதும், 1965 இல் கிளிநொச்சி வித்தியாலயத்தில் அதிபர் பதவி கிடைத்தது.
மக்களின் காணிகளை நில அளவை செய்யும் போது எவ்வித ஊதியமும் இன்றி நீதி, நேர்மை தவறாது அளவீடு செய்தும் ஏற்படும் பிரச்சனைகளைச் சுமூகமாகத் தீர்த்தும் வந்தார். அதுமட்டுமன்றி பெருங்காடு முத்துமாரி அம்பாள் ஆலயத்தின் திருவிழா உபயகாரராக இருந்து திருமுறைகளை பக்தியுடன் பாடி வந்தார்.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 196