ஆளுமை:அம்பலவாணர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அம்பலவாணர்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அம்பலவாணர் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட கல்வியியலாளர், ஆசிரியர்,அதிபர். இவர் நீண்டகாலம் புங்குடுதீவு கணேச வித்தியாலயத்தில் ஆசிரியராகவும், யாழ்ப்பாணம் செங்குந்தா இந்துக் கல்லூரியில் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார். இலக்கியவாதியாகவும் நகைச்சுவைப் பேச்சாற்றல் கொண்டவராகவும் விளங்கினார்.

நல்லூர் நல்லை ஆதீனத்தில் கந்தபுராண ஆஸ்தான வித்தகராகப் பல ஆண்டுகள் சேவையாற்றிய இவர் புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் கொடியேற்றத் திருவிழாவை 40 வருடங்களாகத் தொடர்ந்து நடத்தியவர். அத்துடன் தல்லயப்பற்று முருகன் கோவிலின் தர்மகர்த்தா சபை உறுப்பினராகவும் இவர் கடமையாற்றினார். கந்தபுராணக் கலாச்சாரத்தைப் புங்குடுதீவில் வளர்ப்பதிலும் பங்களித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 200B
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அம்பலவாணர்&oldid=184978" இருந்து மீள்விக்கப்பட்டது