ஆளுமை:அநவரத வினாயகமூர்த்தி, வைத்தியலிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அநவரத வினாயகமூர்த்தி
தந்தை வைத்தியலிங்கம்
தாய் செல்லம்மா
பிறப்பு 1923,.08.31
இறப்பு 2009.12.07
ஊர் இணுவில்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அநவரத விநாயகமூர்த்தி, வைத்தியலிங்கம் (1923.08.31-2009.12.07) யாழ்ப்பாணத்தின் இணுவிலைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவரது தந்தை வைத்தியலிங்கம்; தாய் செல்லம்மா. இவர் இணுவில் இந்துக் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி கற்றார். 1944இல் அரசாங்க சேவையில் எழுது வினைஞனாகச் சேர்ந்து பதவி உயர்வுகள் பெற்று இறுதியாகக் கல்வி அமைச்சில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி 1983இல் ஓய்வு பெற்றார்.

இலக்கியம், சமயம் தொடர்பாகக் கட்டுரைகள் எழுதியுள்ளார். நவராத்திரியும் கலைமகள் வழிபாடும், கல்விச் செல்வி, இலங்கை இலக்கியத்தில் இனிய முத்துக்கள் உள்ளிட்ட பத்து நூல்களை எழுதியுள்ளார். 1954-56 காலத்தில் வெளியான உதயம் இதழின் கௌரவ ஆசிரியராகவும் செயற்பட்டார். சிவநெறிச் செம்மல் விருது, கலாபூசணம் விருது பெற்றுள்ளார்.



இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 1857 பக்கங்கள் 47-61