ஆளுமை:வைரமுத்து, வேலப்பா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:21, 28 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy பயனரால் ஆளுமை:வைரமுத்து, வி. வி., ஆளுமை:வைரமுத்து, வேலப்பா என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்ட...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வைரமுத்து
தந்தை வேலப்பா
தாய் ஆச்சிக்குட்டி
பிறப்பு 1924.02.11
இறப்பு 1989.07.08
ஊர் காங்கேசன்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வைரமுத்து, வேலப்பா (1924.02.11 - 1987.07.08) யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வேலப்பா; தாய் ஆச்சிக்குட்டி. இவர் காங்கேசன்துறை சைவ வித்தியாலயத்திலும் 1932 இல் கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரியிலும் கல்வி கற்றுள்ளார். இசையில் அதிக ஆர்வம் கொண்டதால் இவர் 1941 தொடக்கம் 1942 வரை தமிழகம் சென்று மதுரையில் வித்துவான் செல்லப்பா பிள்ளையிடம் கர்நாடக இசை பயின்தோடு இரண்டு ஆண்டுகளில் சங்கீத வித்துவானாகவும், ஒரு நடிகனாகவும் நாடு திரும்பினார்.

‘'வசந்தகான சபா” என்னும் நாடக மன்றத்தை ஆரம்பித்துச் சரித்திர புராண இதிகாச நாடகங்களை நடித்துள்ள இவருக்கு மேடை நாடகங்களில் பெண் பாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பே முதலில் கிடைத்துள்ளது. இவரது மயான காண்டம் என்னும் இசை நாடகம் இலங்கை முழுவதும் 3000 இற்கும் அதிகமான தடவைகள் மேடையேற்றப்பட்டது. இவர் மிருதங்கம், ஆர்மோனியம், வயலின், ஜலதங்கரம் போன்ற இசைக்கருவிகளை இசைப்பதிலும் வல்லவராய் இருந்ததோடு இலங்கை வானொலியில் கர்நாடக இசைக் கச்சேரிகளும் செய்திருக்கின்றார்

நடிகமணி, நாடகச் சக்கரவர்த்தி, நடிப்பிசை மன்னன், நாடக தீபம், கலைக் கோமான், ந‌வரச திலகம், நாடக வேந்தன், முத்தமிழ் வித்தகர், கலாநிதி ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.


வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 102-103
  • நூலக எண்: 154444 பக்கங்கள் 225-226