ஆளுமை:வைத்திலிங்கம், என். ஏ.
பெயர் | வைத்திலிங்கம், என், ஏ. |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | பொறியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
என்.ஏ.வைத்திலிங்கம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் பொறியியலாளர். இவர் 1940ஆம் ஆண்டு இலங்கை அரசின் புலமைப் பரிசில் பெற்று இந்தியாவிலுள்ள பல வடிகால் அமைப்புக்கள் பற்றிய தொழில்நுட்ப பயிற்சியை கச்சிதமாக முடித்து இந்திய விஞ்ஞானிகள் பலரின் பாராட்டைப் பெற்று நாடு திரும்பினார்.
புங்குடுதீவையும் வேலணையையும் இணைக்கும் வாணர் தம்போதியை அமைப்பதற்கு பொறியியல் தொழில் நுட்ப ஆலோசகராகவும், கொழும்பு புங்குடுதீவு நலன்புரிச் சங்க ஆலோசகராகவும் வாணர் சகோதரர்களுக்கு பக்க பலமாக இருந்து செயற்பட்டார். அத்தோடு 1958ஆம் ஆண்டு இலங்கையில் இடம் பெற்ற இயற்கை அனர்தங்களால் பாதிப்படைந்த புகையிரத சேவையை ஒரு வார காலத்தில் திருத்த வேலைகளை நிறைவேற்றி மீண்டும் சேவையை ஆரம்பித்து வைத்து அன்றைய அரசினதும் மக்களினதும் பாராட்டைப் பெற்றுக்கொண்டார்.
இலங்கை புகையிரத இலாகாவிலிருந்து ஓய்வு பெற்ற பின் 1967ஆம் ஆண்டு சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் பொறியியல் சிரேஷ்ட விரிவுரையாளராகவும், 1971ஆம் ஆண்டு அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் பிரதம ஆலோசகராகவும், பின்னர் பணிப்பாளராகவும் நியமனம் பெற்று அசிய நாடுகளின் அபிவிருத்தி பணிகளுக்கு பெரிதும் சேவையாற்றிய இவருக்கு 1984ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆலோசகராகவும், திட்ட பணிப்பாளராகவும் அதி உயர் பதவி வழங்கப்பட்டது.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 207-208