ஆளுமை:வேதானந்தன், அகஸ்ரின்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:47, 3 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=வேதானந்தன்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வேதானந்தன்
தந்தை அகஸ்ரின்
பிறப்பு 1944.08.23
ஊர் மல்லாகம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேதானந்தன், அகஸ்ரின் (1944.08.23 - ) யாழ்ப்பாணம், மல்லாகத்தைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை அகஸ்ரின். 1950இல் திருமறைக்கலாமன்றம் தொடங்கிய காலத்தில் ஆரம்பகால உறுப்பினராக இணைந்த இவர் கல்வாரியில் கடவுள், சாவை வென்ற சத்தியன், அன்பில் மலர்ந்த அமர காவியம், களங்கம் எழுதிய கரம், பலிக்களம் ஆகிய தயாரிப்புக்களில் யேசுவின் பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளதோடு 300க்கும் மேற்பட்ட சிற்பங்கள் வரை இவர் படைத்துள்ளார்.

1997இல் திருமறைக் கலாமன்றத்தினால் சிற்பச் செல்வன், சிற்ப ஜோதி, 2005இல் தெல்லிப்பளை பிரதேச செயலத்தினால் கலைச்சுடர், ஜேர்மன் கலாசார பணியகத்தால் அருங்கலைக் காவலன், 2007இல் ஜனாதிபதி விருது, கலாசார அமைச்சினால் தங்க விருது மற்றும் கலாபூஷணம் முதலான விருதுகளை இவர் பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 258