ஆளுமை:விஷ்ணுசுந்தரம், சிற்றம்பலம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் விஷ்ணுசுந்தரம்
தந்தை சிற்றம்பலம்
தாய் பார்வதிப்பிள்ளை
பிறப்பு 1927.12.16
ஊர் வல்வெட்டித்துறை
வகை சமூகசேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விஷ்ணுசுந்தரம், சிற்றம்பலம் (1927.12.16 - ) யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஒரு சமூகசேவையாளர். இவரது தந்தை சிற்றம்பலம்; இவரது தாய் பார்வதிப்பிள்ளை. இவர் கல்விக்கூடங்களுக்கும் கலைக்கூடங்களுக்கும் மற்றும் ஏழை எளியவர்களுக்கும் தாம் ஈட்டிய செல்வத்தைப் பகிர்ந்து கொடுத்த பணியாளன். இவர் வல்வை மக்களுக்கு பல தொண்டுகளையும் ஆற்றினார். கோயில்களைத் திருத்தியும் கோயில்களை புனருத்தாணம் செய்தவர். சிதம்பராக் கல்லூரி வல்வை மகளிர் பாடசாலை, சிவகுரு பாடசாலை, உடுப்பிட்டி அ.மி. பாடசாலை யாவற்றுக்கும் தம்மால் இயன்ற நிதியுதவி செய்து நகரத்து பாடசாலைகள் போல, தமது கிராமத்துப் பாடசாலைகளும் முன்னேற்றமடைய வேண்டும் என புது மாடிக் கட்டிடங்களை அமைக்க உதவி புரிந்தவர். ஊறணி இந்திராணி வைத்தியசாலையில் தன் தாயின் பெயரால் 40 படுக்கைகள் கொண்ட பிரசவ மாடி விடுதியை அமைத்துக் கொடுத்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 4192 பக்கங்கள் 78