ஆளுமை:விவேகானந்தன், செல்லையா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:08, 26 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=விவேகானந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் விவேகானந்தன்
தந்தை செல்லையா
பிறப்பு 1943.01.10
ஊர் அல்வாய்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விவேகானந்தன், செல்லையா (1943.01.10 - ) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை செல்லையா. இவர் தனது தந்தையாரிடமும், ஆர்மோனிய வித்துவான் மு. பொன்னையாவிடமும் கலைப்பற்றிய அறிவைப் பெற்றார்.

1974இல் உலக தமிழாராய்ச்சி மகாநாட்டிலும், இலங்கை வானொலியிலும், இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்திலும் மற்றும் பல மேடைகளிலும் இவர் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். மேலும் பல திருவூஞ்சல்பாக்கள், கோவிற்பதிகங்கள், வாழ்த்துப்பாக்கள், நிலைய கீதங்கள், நினைவஞ்சலிப்பாக்கள் என்பவற்றை இயற்றியுள்ளார். மயான காண்டம், ஶ்ரீவள்ளி, நந்தனார், காத்தவராயன், சத்தியவான் சாவித்திரி ஆகிய நாடகங்களில் இவர் நடித்துள்ளார்.

1975இல் நடிப்பிசைப்புலவர், 1988இல் அல்வையூர் ரசிகர் மன்றத்தினால் நடிகநாதமணி ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 222-223