ஆளுமை:விக்னேஸ்வரன், பஞ்சாபிகேசன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் விக்னேஸ்வரன்
தந்தை பஞ்சாபிகேசன்
பிறப்பு 1954.12.12
ஊர் சாவகச்சேரி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விக்னேஸ்வரன், பஞ்சாபிகேசன் (1954.12.12 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த நாதஸ்வர இசைக் கலைஞர். இவரது தந்தை பஞ்சாபிகேசன். சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் உயர்தரம் வரை கற்றார். நாதஸ்வர கலையை தனது தகப்பனாரிடமும் எம். பி. பாலகிருஷ்ணனிடமும் கற்றார்.

இவர் நல்லூர், திருக்கேதீஸ்வரம், துர்க்கையம்மன், கோணேஸ்வரம், அளவெட்டி, கும்பிளாவழைப் பிள்ளையார் போன்ற ஆலயங்களிலும் கொழும்பு வானொலி நிகழ்ச்சிகளிலும் திருமண விழாக்களிலும் சுவிஸ், நெதர்லாந்து, சிங்கப்பூர், நோர்வே, பெல்ஜியம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் தனது கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார்.

இவரது ஆளுமையை கெளரவித்து நெதர்லாந்தில் நாதஸ்வரக் கலாமணி என்ற பட்டமும் சுவிஸ், பிரான்ஸ் போன்ற நாடுகளில் தங்கப்பதக்கங்களையும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 92-93