ஆளுமை:வயித்தியலிங்கம்பிள்ளை, சங்கரக்குரிசில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வயித்தியலிங்கம்பிள்ளை
தந்தை சங்கரக்குரிசில்
பிறப்பு 1852
இறப்பு 1901
ஊர் வல்வெட்டித்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வயித்தியலிங்கம்பிள்ளை, சங்கரக்குரிசில் (1852 - 1901) யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். இவரது தந்தை சங்கரக்குரிசில். இவர் உடுப்பிட்டி சிவசம்புப் புலவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றதோடு, தென்னிந்தியாவுக்குச் சென்று சமஸ்கிருத நூல்களையும் முறையே பயின்றார்.

இவர் சைவ சமய ஆக்கங்கள் கருதி சைவாபிமானி என்னும் பெயருடன் ஒரு பத்திரிகையை நடத்தி வந்தார். மேலும், சைவ மகத்துவ திக்கார நிக்கரகம், சிந்தாமணி நிகண்டு, செல்வச் சந்நிதி முறை, வல்வை வயித்தியேசர் பதிகம், சாதி நிர்ணய புராணம், கந்தபுராணம் - தெய்வானை திருமணப் படலவுரை, கந்தபுராணம் - வள்ளியம்மை திருமணப் படலவுரை, கந்தபுராணம் - சூரபன்மன் வதைப் படலவுரை, கல்வளையந்தாதி உரை, சூடாமணி நிகண்டு போன்ற நூல்களை இவர் எழுதியும், நாற்கவிராச நம்பியகப் பொருளுரை, சிவராத்திரி புராணம், சூடாமணி நிகண்டு போன்ற நூல்களை இவர் பதிப்பித்துமுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 194-195
  • நூலக எண்: 4192 பக்கங்கள் 17-18
  • நூலக எண்: 16357 பக்கங்கள் 43-57
  • நூலக எண்: 4192 பக்கங்கள் 17-18