ஆளுமை:வசந்தா, வைத்தியநாதன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வசந்தா வைத்தியநாதன்
தந்தை பரமேஸ்வர ஐயர்
தாய் அலமேலு
பிறப்பு 1937.12.29
ஊர் தஞ்சாவூர்
வகை எழுத்தாளர், பேச்சாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வசந்தா வைத்தியநாதன் (1937.12.29 - ) தஞ்சாவூரை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர், சொற்பொழிவாளர். இவர்து தந்தை பரமேஸ்வர ஐயர்; தாய் அலமேலு. மயிலடுதுறை பெண்கள் உயர்தரப் படசாலையில் தனது கல்வியை ஆரம்பித்த இவர் தஞ்சை ஆதார ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சி பெற்று சென்னை சர்வகலாசாலை வித்துவான் பட்டப்படிப்பினைத் கற்றுத் தேர்வினை எழுதி வித்துவான் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். 1957ஆம் ஆண்டு தருமபுர ஆதீன திருஞானசம்பந்தர் உயர்நிலைப்பள்ளியில் தலைமைத் தமிழாசிரியையாக நியமனம் பெற்றார்.

இவர் மனோகரா, சிலம்பு, குற்றாலக் குறவஞ்சி, இராஜராஜ சோழன் அகிய நாடகங்களை எழுதி நெறிப்படுத்தி நடித்தும் உள்ளார். காலி ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக மலர், விவேகானந்த சபை பன்னிருதிருமுறை மலர், விவேகானந்த சபையின் வெளியீடான விவேகானந்தன், கொழும்பு ஶ்ரீ இராமகான சபா வெளியிட்ட மாருதம் போன்றவற்றின் ஆசிரியராக பணியாற்றினார். மேலும் 1993ஆம் ஆண்டு இலண்டன் மாநகரில் உயர்வாசல் குன்று ஆலய அழைப்பின் பேரில் 10 நாட்கள் சொற்பொழிவாற்றியதோடு 1998 இலண்டனில் நடைப்பெற்ற முதலாவது சைவமாநாட்டிலும், 1999இல் கனடாவில் நடைப்பெற்ற ஏழாவது சைவமாநாட்டிலும் கலந்துகொண்டு சிறப்புரைகளாற்றியுள்ளார்.

இவரது ஆற்றலைக் கெளரவிக்கும் வகையில் தொண்டர் திலகம், அருள்மொழி அரசி, சிவநெறிப் பெண், செஞ்சொற் செல்வி, விழைத்தமிழ் வித்தகி, ஶ்ரீ வித்யா பூஷணி, அருள் நெறி மாமணி, வாசீக கலாபமணி, ஞானசிரோன்மணி, அருள்மொழி வித்தகி, மகளிர் விருது, மனித நேயன் குமாரசாமி விநோதன் விருது, கம்பன் விழா விருது ஆகிய கெளரவங்கள் வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 1950 பக்கங்கள் 33-39

வெளி இணைப்புக்கள்

வசந்தா வைத்தியநாதன் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்