ஆளுமை:லயனல் திலகநாயகம்போல், சாமுவேல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் லயனல் திலகநாயகம்போல்
தந்தை சாமுவேல்
பிறப்பு 1941.07.06
ஊர் வண்ணார்பண்ணை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

லயனல் திலகநாயகம்போல், சாமுவேல் (1941.07.06 - ) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சேர்ந்த கர்நாடக இசைக் கலைஞர். இவரது தந்தை சாமுவேல். அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் சங்கீத பூஷணம் பட்டம் பெற்று டிப்ளோமா இசைப் பட்டதாரியான இவர், பலாலி அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயின்று ஆசிரியராகச் சேவையில் அமர்ந்து பின்னர் ஆசிரிய ஆலோசகராகவும் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் பணிபுரிந்தார்.

இவர் 1999 ஆம் ஆண்டு பரதநாட்டியம் என்னும் நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அதிவிஷேட பிரிவுப் பாடகராக விளங்கிய இவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் ஆகிய ஊடகங்களில் பல முறை தனது இசைக் கச்சேரிகளை நடத்தி வந்ததோடு நாடகங்கள் பலவற்றிற்கும் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் கர்நாடக சங்கீத இசைக் கச்சேரிகள், பண்ணிசைக் கச்சேரிகள், மெல்லிசைப் பாடல் நிகழ்வுகள், கலைத்துறை கருத்தரங்குகள், விரிவுரைகளை நிகழ்த்தியுள்ளார். ஜேர்மனி, லண்டன், பிரான்ஸ், நோர்வே ஆகிய நாடுகளில் இசை, மெல்லிசைக் கச்சேரிகள் செய்துள்ள இவர் தன் இசைக்குரிய ஒலிநாடாக்க்களையும் வெளியிட்டுள்ளார். இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் 1999ஆம் ஆண்டு கலாபூஷணம் விருது வழங்கப்பட்டதோடு வடமாகாண கல்வி கலாசார விளையாட்டுத்துறை அமைச்சினால் 2008ஆம் ஆண்டு ஆளுநர் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 95