ஆளுமை:மாவைவரோதயன், சிவகடாட்சம்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:08, 28 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | மாவை வரோதயன் |
தந்தை | சிவகடாட்சம்பிள்ளை |
தாய் | தேவி |
பிறப்பு | 1965.09.12 |
இறப்பு | 2009.08.29 |
ஊர் | மாவிட்டபுரம் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மாவை வரோதயன், சிவகடாட்சம்பிள்ளை (1965.09.12 - 2009.08.29) யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சிவகடாட்சம்பிள்ளை; இவரது தாய் தேவி. இவர் காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியிலும் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியிலும் சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியிலும் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியிலும் பயின்றார். இவர் முதலில் கொழும்பு பரீட்சைத் திணைக்களத்திலும் பின்னர் சுகாதாரப் பரிசோதகராக (P.H.I) வெலிசறையில் உள்ள மார்பு சிகிச்சை நிலையத்திலும் பணியாற்றினார்.
இவர் நாடகங்கள், வில்லுப்பாட்டுக்ளை எழுதி அதில் நடித்துமுள்ளார். தேசியக் கலை இலக்கியப் பேரவையின் முக்கிய உறுப்பினராகவும், இலக்கியக் குழுச் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் இன்னமும் வாழ்வேன் என்ற கவிதை நூலையும், வேப்பமரம் என்ற சிறுகதை நூலையும் வெளியிட்டுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 6572 பக்கங்கள் 83-85
- நூலக எண்: 4695 பக்கங்கள் 19