ஆளுமை:பிலிப்பு தெமெல்லோ, சைமன் தெமெல்லோ
பெயர் | பிலிப்பு தெமெல்லோ, சைமன் தெமெல்லோ |
தந்தை | சைமன் தெமெல்லோ |
பிறப்பு | 1723 |
இறப்பு | 1790 |
ஊர் | கொழும்பு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சை. பிலிப்பு தெமெல்லோ (1723 - 1790) கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சைமன் தெமெல்லோ. தமிழில் மட்டுமன்றி எபிரேயம், கிரேக்கம், இலத்தீனியம், போர்த்துக்கேயம் முதலான மொழிகளில் புலமையுடன் விளங்கிய இவர் கொழும்பு நார்மல் பாடசாலையில் ஆசிரியராகவும், 1753ஆம் ஆண்டிலே வடமாகாணத்து சிரேஷ்ட மதகுருவாகவும் பணியாற்றினார்.
சத்தியத்தின் ஜெபம், புதிய ஏற்பாடு, ஒல்லாந்த இறப்பிறமாதுச் சபையின் சரித்திரம், இறப்பிறமாதுச் சபைச் செபகங்கள் ஆகிய நூல்களையும், கொழும்பில் இராசவாசல் முதலியாராய் விளங்கிய மருதப்பிள்ளை அவர்கள் மேல் மருதப்பக் குறவஞ்சி என்னும் நூலையும், சூடாமணி நிகண்டின் இரண்டாம் பகுதிக்கு 20 பாடல்களையும், பன்னிரண்டாம் பகுதிக்கு 100 பாடல்களையும் இயற்றியுள்ளார். கூழங்கைத் தம்பிரான் அவர்களால் இயற்றப்பட்ட யோசேப்பு புராணம் இவருக்கு உரிமை செய்யப்பட்டதாக அறியக்கிடக்கின்றது. இவரால் மொழிபெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாடு 1749ஆம் ஆண்டில் ஒல்லாந்தரின் அச்சுக்கூடத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 172-173