ஆளுமை:பாலசுப்பிரமணியம், வீரசிங்கம்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:11, 1 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாலசுப்பிரமணியம், வீரசிங்கம்
தந்தை வீரசிங்கம்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை சமூக சேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வீரசிங்கம் பாலசுப்பிரமணியம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர். இவர் தனது ஆரம்பக்கல்வியை புங்குடுதீவிலும், உயர் கல்வியை தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார். பின்பு மேற்படிப்பிற்காக 1978ம் ஆண்டு லண்டன் சென்றார்.

இலண்டனில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள இவர் 2003ம் ஆண்டில் புங்குடுதீவு மக்களின் கல்வி அறிவை வளர்க்கும் நோக்கில் முதலில் தனது வீட்டிலும், பல சனசமூக நிலையங்களிலும் சட்டத்தரணி மு.நேமிநாதனுடன் இணைந்து, சில வர்த்தகர்களின் உதவியுடன் 5 சிறுவர் பாடசாலைகள் ஆரம்பித்து இலவச கல்வி, புத்தகம், உணவு, உடை வழங்கி கல்வி புகட்டியதோடு அதை நிறுவகித்தும் வருகிறார். புங்குடுதீவு மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக சுயதொழில் செய்வதற்கான உபகரணங்களையும், நிதி உதவிகளையும் வழங்கி உதவிகள் செய்துவருகின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 219

வெளி இணைப்புக்கள்