ஆளுமை:பரராஜசிங்கம், எஸ். கே.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பரராஜசிங்கம்
பிறப்பு
ஊர் கட்டுவன், யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பரராஜசிங்கம் எஸ். கே. யாழ்ப்பாணாம், கட்டுவனைச் சேர்ந்த மெல்லிசை பாடகர்; வானொலிக்கலைஞன். இளமையிலேயே இசையில் தேர்ச்சிபெற்றிருந்தார். விஞ்ஞானப் பட்டதாரியான இவர் ஹற்றனில் உள்ள கல்லூரி ஒன்றில் விஞ்ஞான ஆசிரியராகப் பணியை மேற்கொண்டிருந்த போது, 1961 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை வானொலியில் இணைந்துகொண்டார்.

இலங்கை வானொலி வர்த்தக சேவையில் தன் பணியை ஆரம்பித்து திரை தந்த இசை, ஒலி மஞ்சரி ஆகிய நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். வானொலிப் பிரதிகள் தொடர்பாக "இதய ரஞ்சனி" என்ற நூலை என். சண்முகலிங்கனுடன் இணைந்து எழுதியுள்ளார். இவரது மெல்லிசைப்பாடல்களை கே. எஸ். பாலசந்திரன் அவர்கள் பதிவுசெய்து 1994ஆம் ஆண்டு "ஒலி ஓவியம்" எனும் ஒலி நாடாவாக வெளியிட்டுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 82-85