ஆளுமை:பரராசசிங்கம், சுப்பையா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:16, 4 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பரராசசிங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பரராசசிங்கம், சுப்பையா
தந்தை சுப்பையா
பிறப்பு
இறப்பு 14.12.2003
ஊர் புங்குடுதீவு
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பரராசசிங்கம் சுப்பையா அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவர் தான் பிறந்த மண்ணிலே கல்வி கற்று இளம் பராயத்திலே தொழில் நிமித்தம் சாவகச்சேரி பட்டினத்தில் வர்த்தகர்களாக இருந்த தன் உறவினர்களிடம் தொழில் கற்று சிறிது காலத்தின் பின் சொந்தமாக தொழில் செய்தார்.

இளமையில் அரசியல் நாட்டம் கொண்டு சாவகச்சேரியி தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரான வி.நவரெட்ணத்துடன் இணைந்து அவரது தொண்டராகவும் நண்பராகவும் இருந்து பல போராட்டங்களில் கலந்து கொண்டார்.

யாழ்ப்பாணத்தில் போசனசாலை ஒன்றை தொடங்கிய இவர் இலாப நோக்குடன் தொழில் செய்தாலும் நேர்மையும் கண்ணியமும் கொண்டவராக காணப்பட்டார். அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர்களின் அரச உதவியுடன் தன் கிராமம் முழுவதற்கும் கூட்டுறவுச் சங்கமூடாக பாடசாலைகளின் முன்னேற்றத்திற்கும், போகுவரத்துகளின் சீர்த்திருத்தத்திற்கும், சேவையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 266