ஆளுமை:பஞ்சாட்சரவேல், வேலுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:52, 21 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பஞ்சாட்சரவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பஞ்சாட்சரவேல்
தந்தை வேலுப்பிள்ளை
பிறப்பு 1944.11.23
ஊர் வட்டுக்கோட்டை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பஞ்சாட்சரவேல், வேலுப்பிள்ளை (1944.11.23 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. இவர் தனது சிறுவயதிலேயே வீரபாண்டிய கட்டப் பொம்மன் ஓரங்க நாடகத்தில் வெள்ளைத் தேவனாக மேடை ஏறினார்.

1964ஆம் ஆண்டில் குரும்ப சிட்டியில் அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட நாடகப் போட்டியில் இவர் நடித்த சோக்க்கிறட்டீஸ் என்ற நாடகம் முதல் இடத்தைப் பெற்றது. மேலும் 1966ஆம் ஆண்டில் சத்தியவான் சாவித்திரி, வட்டுக்கோட்டை கலைமகள் கலைக்குழு சார்பாக கண்டிக் காவலன், 1971இல் இலங்கேஸ்வரன், 1973இல் சீற்றம், 1974இல் கல்லறைக் காவலன் ஆகிய நாடகங்களில் இவர் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்துள்ளார். மேலும் 1975ஆம் ஆண்டில் புங்குடுதீவில் உயிர் ஓவியம் என்ற சரித்திர நாடகம் இவரால் மேடையேற்றப்பட்டது.

இவரது சேவைக்காக 2008ஆம் ஆண்டில் கலாபூஷணம் விருது வழங்கப்பட்டு இவர் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 191-192