ஆளுமை:தேவமதுரம், டானியல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தேவமதுரம்
தந்தை டானியல்
பிறப்பு 1940.08.11
ஊர் அரியாலை
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

டா.தேவமதுரம் (1940.08.11 - ) யாழ்ப்பாணம் அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர். இவரது தந்தை டானியல். யாழ்.பரியோவான் கல்லூரியின் பழைய மாணவரான இவர் க.பொ.த.உயர்தரம் வரை அங்கு கல்வி பயின்றார். இலங்கை அரசினர் எழுதுவினைஞர் சேவையில் இணைந்து பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி ஓய்வுப் பெற்றார். கவிதை, கட்டுரை, சிறுகதை ஆகிய துறைகளில் ஆற்றல் மிகவரான இவர் மட்டக்களப்பு இரா.நாகலிங்கம் (அன்புமணி) அவர்களே தன் கலை வளர உதவிய ஆசான் என குறிப்பிட்டுள்ளார்.

இவர் தனது ஆக்கங்களை இலங்கையில் வெளிவரும் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளிப்படுத்தியுள்ளார். அரியாலை புவனேஸ்வரி அம்பாள் பாமாலை, கோண்டாவில் வல்லிபுரநாதர் திருப்பொற்சுண்ணம், அரியாலை புறக்கோட்டை ஶ்ரீ சிவகாமி அம்பாள் திருவூஞ்சல் ஆகிய தெய்வீக பாமாலைகளை இவர் எழுதி வெளியிட்டுள்ளார். நல்லூர் கலாசாரப் பேரவையின் 2008 ஆம் ஆண்டிற்கான நிர்வாகத்தின் உப செயலாளராக பணியாற்றியதோடு பேரவையின் கீதத்தையும் இயற்றியுள்ளார். இவரது ஆக்கங்களை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபனம் ஒலிபரப்பி வருகின்றது.

1992ஆம் ஆண்டு பாவாணர் என்ற சிறப்பு பட்டத்தினை இவர் பெற்றுள்ளதோடு நல்லூர் கலாசாரப் பேரவையால் 2005 ம் ஆண்டு பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதுடன் “கலைஞானச்சுடர்” என்னும் பட்டமும் வழங்கப் பெற்றார்.

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 27
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 33-34