ஆளுமை:துரைவீரசிங்கம், சரவணமுத்து

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் துரைவீரசிங்கம், சரவணமுத்து
தந்தை சரவணமுத்து
பிறப்பு 1943.06.14
ஊர் கந்தர்மடம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ச. துரைவீரசிங்கம் (1943.06.14 - ) யாழ்ப்பாணம் கந்தர்மடத்தைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை சரவணமுத்து. சிற்பம், ஓவியம் ஆகிய துறைகளில் ஆற்றல் மிக்கவரான இவர் அரச நுண்கலைக் கல்லூரியிலும், பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையிலும் விசேட பயிற்சி பெற்று சித்திரபாட ஆசிரியராக இருபத்தெட்டு ஆண்டுகளும் துறைசார்ந்த ஆலோசகராக ஐந்து வருடங்களும் பணியாற்றி ஓய்வுப் பெற்றார்.

செ. சிவப்பிரகாசம் அவர்களின் மாணவரான இவர் இந்தியா சென்று எம். என். மணி அவர்களிடம் சிற்பம், வார்ப்பு வேலைகள், கோபுர சிற்ப வேலைகள், உருவச்சிலைகள் அமைத்தல் ஆகிய துறை சார்ந்த நுட்பகளை நன்கு கற்றரிந்தார். யாழ்ப்பாணத்தில் 1969ஆம் ஆண்டு நாவலர் சிலையையும், அதே ஆண்டில் கண்டி மாநகரில் இலங்கையின் முதலாவது பிரதம மந்திரி அமரர் டி. எஸ். சேனநாயக்காவின் உருவச் சிலையையும் உருவாக்கிய கலைஞர் இவரேயாவார். அதனைத் தொடர்ந்து கோப்பாய் நாவலர் மகா வித்தியாலயத்தில் 1989ஆம் ஆண்டு நாவலர் சிலையையும், 1982ஆம் ஆண்டு புன்னாலைக் கட்டுவன் கணேசஐயர் சிலையினையும், இணுவில் இராமநாதக் குருக்கள் சிலையையும், மானிப்பாய் இந்துக் கல்லூரியில் அமைந்துள்ள சங்கரப்பிள்ளை சிலையினையும், மானிப்பாய் சென். ஆன்ற் கல்லூரியில் அமைந்துள்ள அருட்தந்தை பஜஸ் அடிகளார் அவர்களின் சிலையினையும் இவரே உருவாக்கினார்.

இவரது கலைப்பணிக்காக ஓவிய சிற்பக் கலையரசு, ஓவிய சிற்ப வாருதி போன்ற சிறப்புப் பட்டங்களை சமூக மட்டத்திலிருந்து பெற்றிருக்கும் இவருக்கு 2006ஆம் ஆண்டு இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் கலாபூஷணம் விருதினையும் வழங்கிக் கௌரவித்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 206