ஆளுமை:துரைராசா, சின்னராசா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:22, 16 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=துரைராசா, ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் துரைராசா, சின்னராசா
தந்தை சின்னராசா
பிறப்பு 1964.12.02
ஊர் கந்தர்மடம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சி.துரைராசா (1964.12.02 - ) யாழ்ப்பாணம் கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மிருதங்க இசைக் கலைஞர். இவரது தந்தை சின்னராசா. 1973ஆம் ஆண்டு முதல் மிருதங்க கலையை கற்று இவர் 1981ஆம் ஆண்டு தனது முதலாவது மிருதங்க கச்சேரியை அரங்கேற்றினார்.

2000ஆம் ஆண்டு கைலாசபதி கலையரங்கில் செயன்முறை ஒலிப்பேழை ஒன்றையும், 2007ஆம் ஆண்டு நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் பல்லவி மாலை நூல் வெளியீட்டையும், அதே ஆண்டில் கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயத்தில் தரம் ஒன்றிற்காக செயல்முறை நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

நீராவி கிராம அபிவிருத்திச் சங்கம் மிருதங்க ஞான வாருதி' என்னும் பட்டத்தை இவருக்கு வழங்கி கௌரவித்ததோடு இசைக் கலைமணி, இசைமாணி போன்ற பட்டங்களும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தால் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 137