ஆளுமை:திருஞானசம்பந்தன், இராசையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திருஞானசம்பந்தன்
தந்தை இராசையா
பிறப்பு 1946.07.04
ஊர் திருநெல்வேலி
வகை கலைஞர், ஓதுவார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருஞானசம்பந்தன், இராசையா (1946.07.04 - ) யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்த பண்ணிசைக் கலைஞர்; ஓதுவார். இவரது தந்தை இராசையா. இவர் தமிழகம் திருப்பணத்தாள் ஆதீனத்தில் பேராசிரியர் க. வெள்ளைவாரணன் அவர்களிடம் பயின்று 19லாம் ஆண்டில் கொக்குவில் இந்துக்கல்லூரியில் ஆசிரியராகவும் 1979ஆம் ஆண்டில் கொழும்புத்துறை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் போதனாசிரியராகவும் பணியாற்றினார். அதன் பின்னர் நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனத்தில் ஓதுவாராக விளங்கினார். 2002ஆம் ஆண்டு இலங்கை அரசின் நீதி அமைச்சினால் சமாதான நீதவானாக நியமனம் பெற்றார்.

இலங்கைத் திருநாட்டிலும், இந்தியா, மலேசியாவிலும் பண்ணிசைக் கச்சேரிகளும் நிகழ்த்தியுள்ள இவருக்கு நல்லை ஆதீனம், கைதடி ஶ்ரீ சச்சிதானந்த ஆச்சிரமம், திருவாடுதுறை ஆதீனம் ஆகியவை இவருக்கு பண்ணிசை வேந்தர், அருளிசை அரசு, தெய்வத் தமிழிழைச் செல்வர் ஆகிய பட்டங்களை வழங்கி கௌரவித்துள்ளது. இந்து சமய கலாசார அமைச்சு 2001ஆம் ஆண்டு கலைஞான கேசரி விருதினையும், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் 2002ஆம் ஆண்டு கலாபூஷணம் விருதினையும் , திருமுருக கிருபானந்தவாரியாரால் 1984இல் திருமுருக வித்தகர் என்னும் பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 2005ஆம் ஆண்டு நல்லூர் கலாசாரப் பேரவை இவரின் கலைப்பணியைப் பாராட்டி கலைஞானச்சுடர் விருதினை வழங்கியுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 108
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 69-70