ஆளுமை:தவராசா, கந்தையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தவராச, கந்தையா
தந்தை கந்தையா
பிறப்பு 1951.12.01
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

க. தவராசா (1951.12.01 - ) யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை கந்தையா. இவர் யாழ்ப்பாணம் கனகரத்தினம் மகாவித்தியாலயத்தில் இடைநிலைக் கல்வி கற்று யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியில் வருகைதரு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி வந்துள்ளார். இத் தொழில் நுட்பக் கல்லூரியிலேயே 1979இல் மரவேலைப் பாடத்தில் அதிசிறந்த சான்றிதழை இவர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தையாரிடம் பதினைந்து வயது முதல் சிற்பக் கலை நுணுக்கங்களை கற்றறிந்து செயற்பட்டு நாற்பத்து மூன்று வருடங்களுக்கு மேலான அனுபவம் பெற்றிருக்கும் இவர் சிற்பக் கலையின் தனித்துவத்தையும், அவற்றின் உள்ளடக்கத்தையும் பேணி அவ்வழியில் தனது கலையாற்றலை வெளிப்படுத்தி வருகின்றார். கொழும்புத்துறை பிள்ளையார் ஆலயத்தின் திருமஞ்சம், அரியாலை நீர்சொச்சிச்தாழ்வு சித்தி விநாயகர் ஆலயத்திற்கான கையிலாய வாகனம், அரியாலை மகாமாரி அம்மன் பூந்தண்டிகை, அரியாலை சித்தி விநாயகர் ஆலய சப்பை ரதம் ஆகியவற்றை இவர் உருவாக்கிக் கொடுத்துள்ளார். இது தவிர நல்லூர் கற்பக விநாயகர் ஆலயம், அரியலை மகாமாரி அம்மன் ஆலயம், சுன்னாகம் ஐயனார் ஆலயம், கொழும்புத்துறை மஞ்சள் பிள்ளையர் ஆலயம், சாவகச்சேரி முருகன் ஆலயம் உட்பட பல பிரசித்திப் பெற்ற ஆலயங்களுக்கும் கோவில் வாகனங்களை உருவாக்கிக் கொடுத்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 208
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:தவராசா,_கந்தையா&oldid=162987" இருந்து மீள்விக்கப்பட்டது