ஆளுமை:தம்பித்துரை, அம்பலவாணர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:32, 20 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தம்பித்துர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தம்பித்துரை
தந்தை அம்பலவாணர்
பிறப்பு 1928.03.30
ஊர் சுன்னாகம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தம்பித்துரை, அம்பலவாணர் (1928.03.30 - ) யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அம்பலவாணர். நாடகங்கள் எழுதுதல், பயிற்றுவித்தல், நெறியாள்கை செய்தல், நடித்தல், சிறுகதை எழுதுதல் போன்ற பல துறைகளிலும் ஈடுபட்டு வந்த இவர் தான் கற்பித்த பாடசாலைகளில் இடம்பெறும் பல நிகழ்ச்சிகளுக்கு நாடகங்களை தயாரித்து மேடையேற்றியுள்ளார்.

உடற்கல்வி ஆசிரியரான இவர் சம்பளம் வரட்டும், இறுதிப் பரிசு, மண் சுமந்த மதுரை, நாயகன், மந்தரையின் சூழ்ச்சி, நீதிக்கொரு சோதனை முதலான நாடகங்களில் பெண் பாத்திரம் ஏற்று நடித்துள்ளதோடு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவருடைய சிறுகதைகள் தொகுப்பாக வெளிவந்துள்ளது.

இவருக்கு 2008ஆம் ஆண்டில் வலிகாமம் தெற்கு கலாசாரப் பேரவை ஞானஏந்தல் எனும் பட்டம் வழங்கிக் கௌரவித்தது. யாழ்ப்பாண முன்னாள் துணை வேந்தர் சு. வித்தியானந்தன் அவர்களால் இவர் சிறந்த நடிகர் என பாராட்டப்பட்டதுடன் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 178