ஆளுமை:ஞானக்குமாரன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:18, 18 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஞானக்குமார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஞானக்குமாரன்
பிறப்பு
ஊர் மட்டுவில்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஞானக்குமாரன் யாழ்ப்பாணம், மட்டுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். யாழ்ப்பாணம் மானிப்பாய் இந்துக் கல்லூரி, கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இவர் கல்வி கற்றுள்ளார். ஜேர்மனிய மொழி போதனாசிரியரான இவர் கவிஞர், எழுத்தாளர் , பாடலாசிரியர், குறுந்திரைப்பட இயக்குனர் என பன்முக ஆளுமை கொண்டவராக திகழ்ந்தார்.

இவர் தனது படைப்புக்களை இலங்கையின் தேசிய பத்திரிகைகளிலும் சர்வதேச சஞ்சிகைகளிலும் எழுதியுள்ளதோடு இணையத்தில் வெளிவரும் பல இலக்கிய சஞ்சிகைளிலும் தொடர்ந்து எழுதியுள்ளார். வெளிச்ச வீடுகள் எனும் கவிதை இறுவட்டை பின்னணி இசையோடு இவர் தனது குரலில் வெளியிட்டிருப்பதோடு லண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பான கரையை தேடும் ஓடங்கள் எனும் வானொலி நாடகத்தை எழுதி, இயக்கி, நடித்து பலரதும் பாராட்டை பெற்றிருக்கின்றார். வசந்தம் வரும் வாசல், முகமறியாத வீரர்களுக்காக, சிறகு முளைத்த தீயாக ஆகிய மூன்றும் இவரது கவிதகளாகும்.


வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 15514 பக்கங்கள் 364
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஞானக்குமாரன்&oldid=174760" இருந்து மீள்விக்கப்பட்டது