ஆளுமை:சோக்கல்லோ சண்முகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சோக்கல்லோ சண்முகம்
பிறப்பு 1935.08.01
ஊர் ஏழாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சோக்கல்லோ சண்முகநாதன் (1935.08.01 - ) யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த கலைஞர்; எழுத்தாளர். "சோக்கல்லோ" என்பது இவரது பட்டப்பெயராகும். 65 ஆண்டு கால நாடகத்துறை அனுபவமுடையவர். தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கிறார். 1945ம் ஆண்டில் தனது 10வது வயதில் "சிறீமுருகன்" என்ற மேடை நாடகத்தில் முதன்முதலாக நடித்தவர். தொடர்ந்து "குணம் குன்றினால்", "சீதனம்", "அடிப்பேன் பல்லுடைய" போன்ற மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார். இவரது "சோக்கல்லோ நகைச்சுவைகதம்பம்" புகழ்பெற்ற நிகழ்ச்சியாகும். குழந்தை சண்முகலிங்கத்தின் "எந்தையும் தாயும்", மஹாகவி உருத்திரமூர்த்தியின் "கோடை", "பிறந்தமண்" ஆகிய நாடகங்கள் இவருக்கு புகழ் சேர்த்தன.

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 303-305
  • நூலக எண்: 1031 பக்கங்கள் 04-05