ஆளுமை:சேகுமதாறு சாகிப் புலவர், மீரான்குட்டி

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:19, 31 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சேகுமதாறு சாகிப் புலவர், மீரான்குட்டி
தந்தை மீரான்குட்டி
பிறப்பு
ஊர் அக்கரைப்பற்று
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சேகுமதாறு சாகிப் புலவர் 19ம் நூற்றாண்டின் இறுதியில் அக்கரைப்பற்றில் வாழ்ந்த புலவர். இவரது தந்தையார் கமக்காரரான மீரான்குட்டி என்பவராவார். இளமையிலே சில்லறை வாணிகத்தில் ஈடுபட்ட சேகு கால மாற்றத்தில் குர் ஆன் முதலான நூல் வியாபாரம் செய்தார்.

இத்தொழில் இவரை கலைவளர்ச்சியில் வழிப்படுத்தியது. எனினும் கண்பார்வை இழந்த நிலையில் மனம் வருந்தி ஆண்டவன் மீது பல வேண்டுதற் செய்யுள்களை பாடிய போது பலராலும் அறியப்பட்டார். இவரது பாடல்கள் 'இறைவன் பேரில் வேண்டல்', 'முகையதீன் ஆண்டகைமீது வேண்டல்' முதலாக பல தலைப்புக்களிற் தொகுக்கப்பட்டு 'பல பாமாலை' என்ற நூலாக அச்சேறியது.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 43
  • நூலக எண்: 2469 பக்கங்கள் 281-286
  • நூலக எண்: 963 பக்கங்கள் 141