ஆளுமை:செல்வராஜா, வைரவன் தில்லையன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:22, 20 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=செல்வராஜா| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்வராஜா
தந்தை வைரவன் தில்லையன்
பிறப்பு 1935.07.30
ஊர் காங்கேசன்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்வராஜா, வைரவன் தில்லையன் (1935.07.30 - ) யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வைரவன் தில்லையன். இவர் வி. வி. வைரமுத்து அவர்களுடன் இணைந்து மயான காண்டம், வள்ளித் திருமணம், பக்த நந்தனார், பூதத்தம்பி போன்ற பல நாடகங்களில் நடித்துள்ளார். காங்கேசந்துறை வசந்தகானசபாவின் ஆரம்பகால அங்கத்தவராக இருந்து சேவையாற்றியுள்ளதோடு இவர் இசை நாடக அண்ணாவியராகவும் பணியாற்றியுள்ளார்.

இவரது கலைப்பணிக்காக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கலைஞானகேசரி என்ற பட்டத்தையும் வலிகாமம் வடக்கு கலாசாரப் பேரவையினால் கலைச்சுடர் என்ற பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 174