ஆளுமை:செல்லையா, வயிரவப்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:01, 3 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=செல்லையா| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | செல்லையா |
தந்தை | வயிரவப்பிள்ளை |
தாய் | சின்னப்பிள்ளை |
பிறப்பு | 1920.04.15 |
இறப்பு | 2004.03.06 |
ஊர் | இளவாலை |
வகை | கல்வியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செல்லையா, வயிரவப்பிள்ளை (1920.04.15 - 2004.03.06) யாழ்ப்பாணம், இளவாலையைச் சேர்ந்த கல்வியியலாளர்; எழுத்தாளர்; சைவப்புலவர். இவரது தந்தை வயிரவப்பிள்ளை; தாய் சின்னப்பிள்ளை. 1952இல் சைவப்புலவர் பட்டமும் சென்னை சர்வகலாசாலையில் வித்துவான் பட்டமும் பெற்ற இவர் பயிற்றப்பட்ட ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தை நிறுவி 1960 - 1973 காலப்பகுதிகளில் அதன் தலைவராகவும், போஷகராகவும் கடமையாற்றியுள்ளதோடு சைவ நீதி சஞ்சிகையின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். நாவலர் நெறியில் நால்வர், ஈழத்து சித்த சிரோன்மணிகள் முதலானவை இவர் எழுதிய நூல்களாகும். சைவப்புலவர், ஞானசிரோன்மணி போன்ற பத்திற்கும் மேற்பட்ட பட்டங்களையும் இவர் பெற்றுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வளங்கள்
- நூலக எண்: 16946 பக்கங்கள் 45