ஆளுமை:செபரெத்தினம், கனகரெத்தினம்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:48, 16 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செபரெத்தினம், கனகரெத்தினம்
தந்தை கனகரெத்தினம்
பிறப்பு 1930.09.24
இறப்பு 2013.12.28
ஊர் தம்பிலுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கனகரெத்தினம் செபரெத்தினம் கிழக்கு மாகாணத்தின் தம்பிலுவில் எனும் இடத்தில் 1930 செப்டெம்பர் 24ம் திகதி கனகரெத்தினத்தின் மகனாக பிறந்தார்.

யாழ்ப்பாணம் நல்லூர் கிறிஸ்தவ ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியராகப் பயிற்சி பெற்றார்.பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பட்டதாரியான இவர் அப்பல்கலைக்கழகத்திலேயே தமிழ் வித்துவான் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவையும் பெற்று கல்வித் தகைமையை உயர்த்திக் கொண்ட கல்விமானாவார்.

இவர் மட்டக்களப்பு பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபராக பணியாற்றியவர். 1962 ஆம் ஆண்டு கிழக்கிலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், 1967 இல் மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், 1968 இல் கிழக்கிலங்கை பண்டிதர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவுமிருந்து கடமையாற்றியவர். க. செபரெத்தினம் 2013. டிசபர் 28 இல் கனடாவில் காலமானார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 92-93