ஆளுமை:சுந்தரலிங்கம், சின்னக்கண்டு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுந்தரலிங்கம்
தந்தை சின்னக்கண்டு
பிறப்பு 1946.09.28
ஊர் வல்வெட்டித்துறை
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுந்தரலிங்கம், சின்னக்கண்டு (1946.09.28 - ) யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை சின்னக்கண்டு. இவர் ஊடகத்துறையில் சுந்தர், ஈழத்தீபன், சுபைதா, ஆருடவாகனன், ஜேனலிசா, ஓவியன், பல்கலைவேந்தன், வல்வைச்சிவன், வல்லழகனார், சுனாமி சுந்தர் ஆகிய புனைப்பெயர்களில் சோதிடம், அறிவியல், சித்திரம், ஆராய்ச்சி போன்ற பல துறைகளிலும் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

கனிஷ்ட பிரிவில் கற்கும் பொழுது பாடசாலைச் சஞ்சிகைகளில் எழுதத் தொடங்கிய இவர் தனது சொந்த வெளியீடான கலைக்கன்னி என்னும் மாதாந்த சஞ்சிகையும் அச்சிட்டு வெளியிட்டுள்ளார். மேலும் பணம் பொருட்களால் நடராஜர் சிலை, நடனமாடும் பொம்மை, ஒருகால் மடித்த கொக்கு, தவம் புரியும் முனிவர் சிலை, ஐந்தூரிய மலர்கள் ஆகியவற்றை இவர் உருவாக்கியுள்ளார்.

2008இல் வடமராட்சி தெற்கு மேற்கு கலாசாரப் பேரவையால் இவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 247-248