ஆளுமை:சுந்தரம், பெரியண்ணன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:44, 29 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சுந்தரம்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுந்தரம்
தந்தை பெரியண்ணன்
பிறப்பு 1890.07.23
இறப்பு 1957.02.04
ஊர் மடுல்கெல்லை
வகை அரசியல் வாதி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுந்தரம், பெரியண்ணன் (1890.07.23 - 1957.02.04) மலையகம், மடுகொல்லையைச் சேர்ந்த அரசியல் வாதி. இவரது தந்தை பெரியண்ணன். தனது ஆரம்பக் கல்வியை தோட்டப் பாடசாலையில் ஆரம்பித்து, கண்டி திரித்துவக் கல்லூரி, பின்னர் கொழும்பு புனித தோமையர் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். தொடர்ந்து கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டத்துறைக் கல்வியைப் பயின்று உயர் கல்வியை லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து பி.ஏ.எல்.பி, மற்றும் எம்.ஏ பட்டங்கள் பெற்றார்.

சேர் பொன்னம்பலம் அருணாசலம், சேர் பொன்னம்பலம் இராமநாதன், டி. எஸ். சேனநாயக்கா ஆகியோருடன் இணைந்து இலங்கை தேசிய காங்கிரசை உருவாக்கினார்.யதோடு இவர் தொழிலாழர் நல உரிமைகள் முன்னணி என்ற தொழிலாளர் அமைப்பை 1919 ஜூலையில் நிறுவினார். இலங்கை தொழிலாளர் சம்மேளனத்தை உருவாக்கி அதன் செயலாளராகப் பணியாற்றினார். 1939 ஆம் ஆண்டில் உருவான இலங்கை இந்தியர் காங்கிரஸ், அதன் பின்னர் உருவான இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் ஆகிய அமைப்புகளின் தலைவராகவும் இருந்து செயல்பட்டார். மேலும் 1931 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்க சபைத் தேர்தலில் அட்டன் தொகுதியில் போட்டியின்றித் தெரிவாகி அன்றைய அரசில் தொழில், மற்றும் வர்த்தக வாணிப அமைச்சராக 1936 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 7652 பக்கங்கள் 25-28