ஆளுமை:சிவநாயகம், எஸ். டி.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:17, 17 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவநாயகம், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவநாயகம், எஸ். டி.
பிறப்பு
இறப்பு 2000.01.22
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவநாயகம், எஸ். டி. (இறப்பு: ஏப்ரல் 22, 2000) இலங்கையின் குறிப்பிடத்தக்க பத்திரிகையாளர்களுள் ஒருவர். மட்டக்களப்பைச் சேர்ந்தவர். இவர் கட்டுரைகள், சிறுகதைகள் பல எழுதியுள்ளார். மட்டக்களப்பில் பெரியாரின் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைப் பரப்பியவர்களுள் இவரும் ஒருவர்.எஸ். டி. சிவநாயகம், 1948 ஆம் ஆண்டில் தினகரன் பத்திரிகை முலம், தனது பத்திரிகைப் பணியை ஆரம்பித்தார். பின்னர், சுதந்திரன் வார இதழிலும், வீரகேசரியிலும் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அதன் பிறகு தினபதி, சிந்தாமணி முதலான தேசிய தினசரி மற்றும் வார இதழை உருவாக்கி அவற்றின் பிரதம இதழாசியராகவும், பிற்காலத்தில் ஆசிரிய பீடத்தின் பணிப்பாளராகவும் (அந்த நிறுவனம் 1974 ஆம் ஆண்டில் மூடப்பட்ட காலம் வரை) பணியாற்றினார். அதன் பின்னர் மாணிக்கம் என்ற மாத இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 406-407


வெளி இணைப்புக்கள்