ஆளுமை:சிவநாயகமூர்த்தி, சுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவநாயகமூர்த்தி, சுப்பிரமணியம்
தந்தை சுப்பிரமணியம்
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி அவர்கள் நெடுந்தீவைச் சேர்ந்த ஓர் கல்வியியலாளர். இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் ஆரம்பகால மாணவரும் ஆவார். இலங்கையில் முதன் முறையாக நடைப்பெற்ற கல்வி நிர்வாக சேவைப் போட்டிப் பரீட்சையில் தெரிவான முதலாவது தீவக ஆசிரியர் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் இறக்குவானை சென்ஜோண்ஸ் மகாவித்தியாலயம், நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாசாலை, போன்ற பல பாடசாலைகளில் உதவி ஆசிரியராகவும், நயினாதீவு கணேஷா கனிஷ்ட மகாவித்தியாலயம், உருத்திரபுர மகாவித்தியாலயம் ஆகியவற்றில் அதிபராகவும் பணியாற்றினார். 1975ஆம் ஆண்டு முதல் 1981ஆம் ஆண்டு வரை பண்டாராளை கல்வி மாவட்டத்தில் கல்வி அதிகாரியாகவும், 1981ஆம் ஆண்டு முதல் 1988ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாண கல்வி மாவட்டத்திலுள்ள நல்லூர் கல்வி வட்டாரத்தின் கல்வி அதிகாரியாகவும் கடமையாற்றினார்.

இவர் மானிப்பாய் இராமநாதன் கல்லூரியிலமைக்கப்பட்ட வலயக் கல்வி காரியாலயத்தில் நிர்வாகத்திற்கு பொறுப்பான கல்வியதிகாரியாக 1988-1989வரை கடமையாற்றியதோடு 1988ஆம் ஆண்டிலிருந்து பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் பதவி உயர்வு பெற்றிருந்தார். கனடாவிலும் 1993ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை ரொறன்ரோ கல்விச் சபையின் கீழ் ஆசிரியராக கடமையாற்றினார். தற்சமயம் இவர் கனடா இலங்கைப் பட்டதாரிகள் சங்கத்தின் துணைச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். 2003ஆம் ஆண்டு கனடா, ரொறன்ரோ நகரில் இவரால் எழுதப்பட்ட நெடுந்தீவு மக்களும் வரலாறும் என்ற நூல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 147-148