ஆளுமை:சத்தியபாலன், நடராசா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சத்தியபாலன், நடராசா
பிறப்பு 1954.04.17
ஊர் நல்லூர்
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ந.சத்தியபாலன் (1954.04.17 - ) யாழ்ப்பாணம் நல்லூரை வசிப்பிடமாகக் கொண்ட ஓர் கவிஞர். இவரது தந்தையாரின் பெயர் நடராசா. கவிதை, சிறுகதை, பத்தி, கட்டுரை எழுதுவதில் ஈடுபாடு கொண்டவரக இவர் விளங்குகின்றார். இவரின் எழுத்துத் துறைக்கு செம்பியன் செல்வனை ஆசிரியராகக் கொண்ட அமிர்த கங்கை என்னும் சஞ்சிகை முதலில் களம் அமைத்து கொடுத்தது. இவரது நிறமிழக்கும் கறைகள் என்னும் சிறுகதையே முதலில் பிரசுரமான சிறுகதையாகும். இவர் சௌஜன்யஷாகர், நேசன் என்னும் புனைபெயர்களில் தனது ஆக்கங்களை எழுதி வருகின்றார்.

இவரது முதலாவது கவிதைத் தொகுதி இப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும் என்னும் தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. கலைமுகம் சஞ்சிகையில் சுவைத்தேன் என்னும் கவிதை பற்றிய தொடரை சௌயன்ய ஷாகர் என்ற புனைபெயரில் எழுதி வந்துள்ளார்..

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 31


வெளி இணைப்புக்கள்