ஆளுமை:சண்முகராசா, கணபதிப்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:07, 12 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | சண்முகராசா, கணபதிப்பிள்ளை |
தந்தை | கணபதிப்பிள்ளை |
பிறப்பு | 1922.07.27 |
ஊர் | அரியாலை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
க.சண்முகராசா (1922.07.27 - ) யாழ்ப்பாணம் அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட கலைஞர். இவரது தந்தை பெயர் கணபதிப்பிள்ளை. இவர் யாழ். ஸ்ரான்லி கல்லூரியிலும், யாழ். பரியோவான் கல்லூரியிலும் கல்வி கற்று மற்றிக்குலேசன் பரீட்சையில் சித்திப் பெற்று 1951ஆம் ஆண்டிலிருந்து ஆறு ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி அதனின்று விடுபட்டு 1958ஆம் ஆண்டு முதல் கிராமத் தலைவராக நியமனம் பெற்று 1979ஆம் ஆண்டு வரை பணியாற்றி ஓய்வு பெற்றார்.
இவர் ஓய்வுப் பெற்ற காலத்திலேயே கர்நாடக சங்கீத முறைப்படி புல்லாங்குழல் இசையை கற்று சங்கீத பூஷணம் அரியாலையூர் ச.பாலசிங்கம் அவர்களிடம் கற்றார். இவர் நல்லூர் பிரதேச கலாசாரப் பேரவையால் 2008ஆம் ஆண்டு பொன்னாடை போர்த்தி கலைஞானச்சுடர் விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 80