ஆளுமை:குமாரசுவாமி, வல்லிபுரம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:19, 12 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=குமாரசுவாம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குமாரசுவாமி, வல்லிபுரம்
தந்தை வல்லிபுரம்
பிறப்பு 1926.06.30
ஊர் பருத்தித்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வ.குமாரசுவாமி (1926.06.30 - ) யாழ்ப்பாணம் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட கலைஞர். இவரது தந்தை வல்லிபுரம். தொழில் ரீதியாக நாதஸ்வரம் இசைக் கலையில் ஈடுபாடு கொண்ட இவர் தனது ஒன்பதாவது வயதில் மாவிட்டபுரம் சோமசுந்தரம் நடராசா என்ற நாதஸ்வர வித்துவானிடம் நாதஸ்வர இசைக் கலையைப் பயின்று மேலும் வண்ணை வைதீஸ்வரன் தேவஸ்தான நாத்ஸ்வர வித்துவான் எஸ்.கந்தசாமி அவர்களிடமும் அதன் பின்னர் தென்னிந்தியாவுக்கு சென்று சித்தாம்பூர் நாதஸ்வரமேதை இராஜகோபால் பிள்ளையிடம் விசேட பயிற்சியும் பெற்று வந்தார்.

இவர் கொழும்பு ஆடிவேல் விழா, சிலாபம் முன்னேஸ்வர ஆலயத் திருவிழாக்கள், வடமராட்சி ஶ்ரீ வல்லிபுரம் ஆழ்வார் ஆலய உற்சவங்கள் நல்லூர் கந்தசுவாமிக் கோவில் எனப் பல கோவில்களிலும் தனது இசைக் கச்சேரிகளை ஆற்றியுள்ளார்.

2001ஆம் ஆண்டு நாதகீர்த்தனா, ராகபூபதி ஆகிய பட்டங்களையும், 2002ஆம் ஆண்டு 'இசைஞான கலாபமணி என்ற பட்டத்தையும் இவர் பெற்றுக் கொண்டதோடு வயது முதிர்ந்த நிலையிலும் தனது நாதஸ்வர இசை வெள்ளத்தில் ஏனையோரை மூழ்க வைத்து மகிழ்ச்சியடைய வைக்கும் இவரின் கலைப்பணியைப் பாராட்டி இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் 2004ஆம் ஆண்டு கலாபூசணம் விருது வழங்கி இவரை கௌரவித்ததோடு நல்லூர் பிரதேச கலாசாரப் பேரவை இவரது கலைச்சேவைகாக கலைஞானச்சுடர் எனும் விருதையும் வழங்கியது. மேலும் பல ஆலயங்களிலும் இவர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 86