ஆளுமை:கிருஷ்ணராஜா, கே.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:39, 1 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கிருஷ்ணராஜ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிருஷ்ணராஜா
பிறப்பு 1950.05.29
ஊர் பருத்தித்துறை
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிருஷ்ணராஜா, கே. (1950.05.29 - ) யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த ஓவியர். இவர் ஹாட்லிக் கல்லூரியில் கல்வி கற்றுள்ளார். இவர் ஓவியர் மாற்குவிடம் ஓவியப் பயிற்சிப் பெறத்தொடங்கி தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு மேலாக ஓவிய, சிற்ப கலைகளில் பல பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

1987இலிருந்து லண்டனில் வதியும் இவர் அங்கு மூன்று கண்காட்சிகளை நடாத்தி வந்துள்ளார். தமிழர் தகவல் நடுவத்தினால் 1991.05.12இல் ஒழுங்கு செய்யப்பட்ட மனித உரிமைக் கல்வி தொடர்பான மாநாட்டின் போதும் பின்னர் 1991.07.21இல் தமிழ் அவைக்காற்று கலைக்கழகத்தின் ஆதரவில் Willesden Green Libraryஇலும் 1991.11.12-29இல் Stratfordஇலும் Tom Allen Centre ஆதரவில் Tom Allen Galleryஇலும் இவரது ஓவிய சிற்ப கண்காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் இவரது ஓவியங்கள் சில நூல்களுக்கான அட்டைப் படங்களாகவும் இடம்பெற்றுள்ளன. ஓவியம், பதிப்புத்துறை தவிரவும் நாடகத்துறையிலும் இவரது பங்களிப்பி சிறப்பானதாகும்.


வளங்கள்

  • நூலக எண்: 16140 பக்கங்கள் 09
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:கிருஷ்ணராஜா,_கே.&oldid=175762" இருந்து மீள்விக்கப்பட்டது