ஆளுமை:காலிதீன், அல்ஹாஜ் பி. எம். கே. முகமது

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:00, 15 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=காலிதீன், க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் காலிதீன், கே. எம். எச்.
தந்தை அல்ஹாஜ் பி. எம். கே. முகமது
பிறப்பு 1944
இறப்பு 2010.07.07
ஊர் கிண்ணியா
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கே. எம். எச். காலிதீன் திருகோணமலை மாவட்டத்திலுள்ள கிண்ணியா, ஈச்சந்தீவு கிராமத்தில் 1944ம் ஆண்டு பிறந்த இவர், கிண்ணியா மகா வித்தியாலயம், கொழும்பு சாஹிராக் கல்லூரி என்பவற்றின் பழைய மாணவராவார்.

1966ம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப் பட்ட பேராசிரியர் காலிதீன், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரபுத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றார்.

1971ம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்று கொழும்பு சாஹிராக் கல்லூரி, கம்பளை சாஹிராக் கல்லூரி என்பனவற்றில் பணியாற்றிய அவர், 1976ம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரபு இஸ்லாமிய நாகரீகத் துறை விரிவுரையாளராக நியமனம் பெற்றார். அத்தோடு 1981ல் இருந்து பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் பகுதி நேர விரிவுரையாளராகவும் பணியாற்றினார். இவர் 2010 ஜூலை 07ம் திகதி, தனது 66வது வயதில் கொழும்பில் காலமானார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 89
  • நூலக எண்: 12195 பக்கங்கள் பின் அட்டை