ஆளுமை:காசிப்பிள்ளை, குமாரவேலு
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:23, 3 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=காசிப்பிள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | காசிப்பிள்ளை |
தந்தை | குமாரவேலு |
பிறப்பு | 1929.17.08 |
ஊர் | கைதடி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
காசிப்பிள்ளை, குமாரவேலு (1929.08.17 - ) யாழ்ப்பாணம், கைதடியைச் சேர்ந்த வாணவேடிக்கைக் கலைஞர். இவரது தந்தை குமாரவேலு. இவர் 1948இல் இலங்கை சுதந்திர தின நிகழ்வு சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி முன்றலில் இடம்பெற்ற போது அங்கு தனது வாணவேடிக்கை சாகச நிகழ்ச்சிகளை நடத்திப் புகழ் பெற்றார். மேலும் யாழ்ப்பாண திறந்தவெளியரங்கு, நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயம், நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி, சீரணி அம்மன் ஆலயம், அச்சுவேலி பிள்ளையார் ஆலயம் ஆகிய இடங்களில் வாணவேடிக்கைகளை நிகழ்த்தியுள்ளார். 60வருடங்களுக்கு மேலாக இத் துறையில் சேவையாற்றி வரும் இவருக்கு 1951இல் முன்னாள் அரசாங்க அதிபரால் வானவாரிதி பட்டம் கிடைக்கப்பெற்றுள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 264