ஏன் பெண்ணென்று...

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஏன் பெண்ணென்று...
542.JPG
நூலக எண் 542
ஆசிரியர் சாரங்கா
நூல் வகை சிறுகதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் மீரா பதிப்பகம்
வெளியீட்டாண்டு 2004
பக்கங்கள் 98

[[பகுப்பு:சிறுகதை]]

வாசிக்க



நூல்விபரம்

சாரங்கா, நவீனத்துவ உள்ளியல்புகளை நேர்த்தியாக உள்வாங்கி, இயற்பண்பியலின் நல்ல அம்சங்களையும் மனத்திலிருத்தித் தனக்கென ஒரு தனிப்பாணியை அமைத்து வளரும் ஆக்க ஆளுமையுடைய இளம் படைப்பாளி. இது 2003-ம் ஆண்டுக்குரிய ஞானம் சஞ்சிகையின் விருது பெற்ற நூல். இதிலுள்ள ஒன்பது கதைகளும் சமகாலப் போர்ச் சூழலின் அவலக் குரல்களாகவும், விடுதலை வேண்டி நிற்கும் அமுக்கப்பட்ட பெண்ணியக் குரல்களாகவும் ஒலிக்கின்றன. உணர்ச்சிகளின் மென்மையான வெளிப்பாடு இவரது எழுத்துக்களின் உயிர்நாடியாக அமைந்துள்ளன. சொற்சிக்கனம், கவிதை நடையின் சாயல், குறியீடுகளின் பயன்பாடு, சொல்லாமல் சொல்லும் உத்தி என்பன இவரது தனித்துவப் பாணிகளாகக் கதைகளில் மிளிர்கின்றன.


பதிப்பு விபரம்


ஏன் பெண்ணென்று. சாரங்கா. (இயற்பெயர்: சதாசிவமூர்த்தி குணாளினி). கொழும்பு 5: மீரா பதிப்பகம், c-3/5, அன்டர்சன் தொடர்மாடி, பார்க் வீதி, நாரஹேன்பிட்டி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2004. (கொழும்பு 13: ஈ-குவாலிட்டி கிராப்பிக்ஸ், 315, ஜம்பெட்டா வீதி) 98 பக்கம், விலை: ரூபா 170., அளவு: 17 * 12.5 சமீ.

-நூல் தேட்டம் (# 2599)

"https://noolaham.org/wiki/index.php?title=ஏன்_பெண்ணென்று...&oldid=13325" இருந்து மீள்விக்கப்பட்டது