ஆளுமை:கருணாகரமூர்த்தி, பொன்னையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கருணாகரமூர்த்தி
தந்தை பொன்னையா
தாய் இராசம்மா
பிறப்பு 1954.05.08
ஊர் புத்தூர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கருணாகரமூர்த்தி, பொன்னையா (1954.05.08 -) யாழ்ப்பாணம், புத்தூரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பொன்னையா; தாய் இராசம்மா. இவர் தனது ஆரம்பக் கல்வியை எட்டாம் வகுப்பு வரை புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரியிலும் பின்னர் ஒன்பதாம் வகுப்பும் பத்தாம் வகுப்பும் அனுராதபுரம் புனித ஜோசப் கல்லூரியிலும் கல்வி பொதுத்தராதர உயர்தர வகுப்பு வரை புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரியிலும் கற்றார்.

இவர் 1985 இல் கணையாழில் வெளிவந்த ‘ஒரு அகதி உருவாகும் நேரம்’ எனும் குறுநாவல் மூலம் சிறுபத்திரிகை வாசகர்களுக்கு அறிமுகமானார். டிசம்பர் 2010 இல் வெளிவந்த இவரது பதுங்குகுழி சிறுகதைத்தொகுப்பு கனடாவின் தமிழ் இலக்கியத்தோட்டம் என்னும் இலக்கிய அமைப்பால் 2010 இன் சிறந்த சிறுகதைத்தொகுப்பாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றது. கிழக்கு நோக்கி சில மேகங்கள், அவர்களுக்கு என்று ஒரு குடில், கூடு கலைதல் ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களையும் ஒரு அகதி உருவாகும் நேரம் என்ற மூன்று குறுநாவல்களையும் இவர் எழுதியுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 138-143
  • நூலக எண்: 1855 பக்கங்கள் 75-79
  • நூலக எண்: 16140 பக்கங்கள் 10