ஆளுமை:கனகசபை, எஸ். ஆர்.
பெயர் | கனகசபை, எஸ். ஆர். |
பிறப்பு | 10.07.1901 |
இறப்பு | 1964 |
ஊர் | இருபாலை |
வகை | ஓவியவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
எஸ்.ஆர்.கனகசபை அவர்கள் யாழ்ப்பாணம், இருபாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் ஓவியர். சென்னை கலைக்கல்லூரியில் பயின்ற இவர் யாழ் பரமேஸ்வரா கல்லூரியில் சித்திர ஆசிரியராக இருந்ததோடு சித்திர வித்தியாதரிசியாகவும் இருந்தார். வின்ஸரின் தூண்டுதலால் ஓவியத்தை சீவனோபாயத் தொழிலாக வரித்துக் கொண்டு 1938இல் வின்ஸர் சித்திரக்கழகம் என்ற ஓவியப் பயிற்சிக் கழகத்தை ஸ்தாபித்து 1955ஆம் ஆண்டு வரை இயங்கினார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பொன் விழாக் கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக வின்ஸர் ஆட் கிளப்பின் சித்திரக் கண்காட்சியும் இவரின் முயற்சியால் இடம்பெற்று பல ஓவியர்களது பிரதிமைகள், இயற்கைக்காட்சிகள், வர்ணவேலை, பென்சில்வேலை என பலவகைப்பட்ட சித்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டதோடு இவரது நயினாதீவு சாமியார், சோமசுந்தரப் புலவர் போன்ற இரு ஓவியங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதன்பின் யாழ்ப்பாணத்து சித்திரக்காரரின் தலமைஸ்தானம் எஸ்.ஆர்.கனகசபைக்கே இருந்தது என்பதை ஈழகேசரியில் வெளிவந்த விமர்சனமொன்றிலிருந்து அறியமுடிகின்றது.
வளங்கள்
- நூலக எண்: 2970 பக்கங்கள் 08-11