ஆளுமை:கந்தையா, மருதன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:21, 13 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கந்தையா| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கந்தையா
தந்தை மருதன்
பிறப்பு 1946.10.01
ஊர் சரவணை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தையா, மருதன் (1946.10.01 - ) யாழ்ப்பாணம், சரவணையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை மருதன்.

இவர் நந்தனார், அரிச்சந்திர மயான கண்டம், சாம்ராட் அசோகன் ஆகிய நாடகங்களை இயக்கியும் நடித்துமுள்ளதோடு சிந்திய ரத்தங்கள் சீரழிந்ததில்லை, இதயக் குழுறல் ஆகிய நாடகங்களை எழுதியுமுள்ளார். மேலும் திருவள்ளுவர் நாடக மன்றம் எனும் நாடக மன்றத்தினை நிறுவி 2002ஆம் ஆண்டில் அரிச்சந்திர மயான காண்டம் எனும் நாடகத்தினை வவுனியா, மாத்தறை போன்ற இடங்களிற்கு கொண்டு சென்று மேடையேற்றியதோடு தனது மன்றத்தில் கும்மி, கோலாட்டம், காவடி, கிராமிய நடனம் முதலானவற்றை பயிற்றுவித்துமுள்ளார்.

இவருக்கு 2004இல் பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகம் தனது 10வது ஆண்டு நிறைவையொட்டி நடத்திய இசை நாடகப் போட்டியில் சிறந்த நடிகருக்கான மரபுக் கலைச்சுடர் பட்டமும் கலைவாருதி எனும் பட்டமும் வழங்கி இவரை கௌரவித்தது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 142
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:கந்தையா,_மருதன்&oldid=171609" இருந்து மீள்விக்கப்பட்டது